For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைக்குத்தல் அரிசி இட்லி

By Maha
|

நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு உணவையும் எளிதில் சாப்பிட முடியாது. எதை சாப்பிட நினைத்தாலும், அதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். முக்கியமாக இத்தகையவர்கள், அரிசியை உணவில் அதிகம் சேர்க்கவே கூடாது என்று சொல்வார்கள். ஆனால் கைக்குத்தல் அரிசியால் ஆன இட்லி, மிகவும் சிறந்த ஒரு காலை உணவாகும்.

இந்த கைக்குத்தல் அரிசி இட்லி சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்போது அந்த கைக்குத்தல் அரிசி இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Brown Rice Idli for Diabetics

தேவையான பொருட்கள்:

கைக்குத்தல் அரிசி - 2 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
அவில் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 7-8 கப்

செய்முறை:

முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் அவிலை தனித்தனியாக நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் ஒவ்வொன்றையும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை கழுவி வடிகட்டி விட்டு தனியாக வைத்து கொள்ள வேண்டும்.

முதலில் அரிசியை கிரைண்டரில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உளுத்தம் பருப்பை மற்றும் அவிலை தனியாக நன்கு நைஸாக அரைத்து விட்டு, மூன்றையும் ஒன்றாக மீண்டும் கிரைண்டரில் போட்டு, 10 நிமிடம் நன்கு கலந்து கொள்ளவும்.

பின்பு அதனை 4 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் ஊற வைத்துக் கொண்டு, உப்பு போட்டு கிளறி, இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான கைக்குத்தல் அரிசி இட்லி ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

English summary

Brown Rice Idli for Diabetics | கைக்குத்தல் அரிசி இட்லி

Here is a simple Brown Rice Idli breakfast recipe for diabetics that not only tastes delicious but also healthy at the same time. So try out this recipe of brown rice idli.
Story first published: Tuesday, May 14, 2013, 10:49 [IST]
Desktop Bottom Promotion