For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சம்பா ரவை உப்புமா

By Maha
|

சம்பா ரவை உப்புமா/கோதுமை ரவை உப்புமா, உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு சிறந்த காலை உணவு. ஏனெனில் இதில் கலோரி மிகவும் குறைவாக இருக்கும். மேலும் இந்த உப்புமாவில், வைட்டமின் ஏ அதிகம் உள்ள பச்சை பட்டாணி மற்றும் கேரட் இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த காய்கறிகள், ரெசிபிக்கு ஒரு சிறந்த சுவையைத் தருகிறது.

இப்போது அந்த சம்பா ரவை உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Broken Wheat Upma

தேவையான பொருட்கள்:

சம்பா ரவை - 1/2 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 டீஸ்பூன் (துருவியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 3 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சம்பா ரவையை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைக்க வேண்டும்.

பின்னர் 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ரவையைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனை
இறக்கி, நீரை வடிகட்டி வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு துருவிய இஞ்சியை சேர்த்து கிளறி, பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து, பிரட்டி 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அத்துடன் சம்பா ரவையை சேர்த்து, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு, இறக்க வேண்டும்.

பின் குக்கரை திறந்து, அதன் மேல் கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்து பரிமாறினால், சம்பா ரவை உப்புமா ரெடி!!!

English summary

Broken Wheat Upma | சம்பா ரவை உப்புமா

Broken wheat upma is a great breakfast option if you want to lose weight and yet eat something delicious. Along with the broken wheat, carrots and green peas add to the taste and makes this recipe rich in Vitamin A. So, try this low calorie breakfast recipe and start your day on a healthy note.
Story first published: Tuesday, May 7, 2013, 10:16 [IST]
Desktop Bottom Promotion