For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுரைக்காய் சன்னா தால் ரெசிபி

By Maha
|

பெரும்பாலானோர் சைடு டிஷ் செய்யும் போது சுரைக்காயை பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும் சுரைக்காயை பலர் சாப்பிடமாட்டார்கள். ஆனால் அந்த சுரைக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளது என்பது தெரியுமா? ஆம், சுரைக்காயை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை நீங்கும். உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகள் கூட இந்த காய்கறியை சாப்பிடுவது நல்லது.

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை: சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்து சாப்பிட்டால், சுவைக்கு சுவை கிடைப்பதுடன், உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். மேலும் இந்த ரெசிபியானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த சுரைக்காய் சன்னா தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Bottle Gourd Chana Dal Recipe

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் - 1/2 கிலோ (தோலுரித்து நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது)
கடலைப்பருப்பு - 1/2 கப் (நீரில் ஊற வைத்தது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள சுரைக்காய் சேர்த்து மீண்டும் 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

எப்போது வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு மென்மையாகிறதோ, அப்போது தேங்காய், கடலை பருப்பு சேர்த்து நன்கு கிளறி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.

இறுதியில் விசிலானது போனதும், அதில் மாங்காய் தூள் சேர்த்து கிளறி விட்டால், சுவையான சுரைக்காய் சன்னா தால் ரெடி!!! இதனை சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும்.

English summary

Bottle Gourd Chana Dal Recipe

If you want to prepare a delicious side dish for rice or chapathy, then try this bottle gourd chana dal recipe. Check out the recipe and give it a try.
Story first published: Monday, January 20, 2014, 12:16 [IST]
Desktop Bottom Promotion