For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்காலி ஸ்டைல் மிக்ஸ்டு வெஜிடேபிள் குழம்பு

By Maha
|

பெங்காலி குழம்புகளின் சுவையே தனியாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் சேர்த்து பல்வேறு வகையாக மசாலாக்கள் மற்றும் பொருட்கள் தான். அந்த வகையில் இப்போது பல்வேறு காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் குழம்பை பெங்காலி ஸ்டைலில் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம்.

மேலும் இந்த ரெசிபியானது சாதத்திற்கு சூப்பராக இருக்கும். மேலும் இதன் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் வெங்காய விதை சேர்த்திருப்பது தான். சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

Bengali Style Mixed Vegetable Curry

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து நறுக்கியது)
பசலைக்கீரை - 1/4 கட்டு (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
இஞ்சி - 1 இன்ச் (துருவியத)
வெங்காய விழுது - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காய விதை - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் அனைத்து காய்கறிகளையும் நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை மட்டும் உப்பு கலந்த நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய விதை சேர்த்து தாளித்து, துருவிய இஞ்சியைப் போட்டு வதக்க வேண்டும்.

பின் நறுக்கி வைத்துள்ள கேரட், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், பச்சை பட்டாணி ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு பசலைக்கீரையை போட்டு வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் குறைவான தீயிலேயே வேக வைக்க வேண்டும்.

அடுத்து தண்ணீரை ஊற்றி, தட்டு கொண்டு மூடி வைத்து, 10 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளானது நன்கு வெந்துவிட்டால், அடுப்பை அணைத்து, அதனை இறக்கினால், சுவையான பெங்காலி ஸ்டைல் மிக்ஸ்டு வெஜிடேபிள் ரெடி!!!

English summary

Bengali Style Mixed Vegetable Curry

Bengali curries are always one of a kind. The unusual mix of ingredients make the Bengali recipes a delightful treat for everyone. Let us have a look as to how to prepare this Bengali style mixed vegetable curry.
Story first published: Wednesday, November 20, 2013, 12:19 [IST]
Desktop Bottom Promotion