For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடைமிளகாய் காளான் ரெசிபி

By Maha
|

சப்பாத்திகளுக்கு எப்போதும் ஒரே மாதிரியான கிரேவி, மசாலா போன்றவற்றை செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா? அதிலும் சற்று பொரியல் போன்று செய்தால், இன்னும் ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, ஒரு எளிய ரெசிபியை கொடுத்துள்ளது. அதற்கு பெயர் குடைமிளகாய் காளான் ரெசிபி.

சரி, இப்போது அந்த குடைமிளகாய் காளான் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Bell Pepper Mushroom Recipe

தேவையான பொருட்கள்:

சிவப்பு குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
காளான் - 12 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மிளகு - 3 டேபிள் ஸ்பூன்
துளசி - சிறிது (நறுக்கியது)
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் மிளகு, சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய் சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.

குடைமிளகாயானது நன்கு வெந்ததும், அதில் காளானைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் தண்ணீரை ஊற்றி, தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளானது நன்கு வெந்ததும், அதில் உப்பு தூவி, 5 நிமிடம் கிளறி விட்டு இறக்கி, அதன் மேல் துளசியை தூவி அலங்கரித்தால், சூப்பரான குடைமிளகாய் காளான் ரெசிபி ரெடி!!!

English summary

Bell Pepper Mushroom Recipe

The bell pepper mushroom recipe is easy to make and not at all time consuming. This special lunch recipe will go well as a side dish. One of the best things about this bell pepper mushroom recipe is the colour of the dish which will make you feel all the more hungry. Lets see how to prepare the bell pepper mushroom recipe.
Story first published: Thursday, September 5, 2013, 19:18 [IST]
Desktop Bottom Promotion