For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீட்ரூட் சாம்பார்

By Maha
|

தென்னிந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் பீட்ரூட் சாம்பார் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. இந்த சாம்பார் பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில், மிகவும் சுவையான ருசியில் இருக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் செய்து அழுத்துப் போனவர்கள், இந்த பீட்ரூட் சாம்பாரை ட்ரை செய்து பார்க்கலாம்.

இது எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு சாம்பார் ரெசிபி. இப்போது அந்த பீட்ரூட் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 2 கப்
பீட்ரூட் - 2 (சிறியது)
கடுகு - 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 எலுமிச்சை அளவு (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, கரைத்தது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பீட்ரூட் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கி, குளிர வைத்து, நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து, துவரம் பருப்பை கழுவிப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி விட வேண்டும்.

விசிலானது போனதும், அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, கடைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்து நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.

பின்பு அத்துடன் கடைந்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து ஒரு கிளறி விட்டு, கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி நன்கு 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 5 நிமிடம் கொதிக்க விட்டு, இறக்க வேண்டும்.

இப்போது சுவையான பீட்ரூட் சாம்பார் ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

English summary

Beetroot Sambar Recipe

Beetroot sambar is one of these speciality sambars from Tamil Nadu. So, if you are bored of cooking the same sambar over and over again, then beetroot sambar is a perfect recipe for you. Here is the recipe.
Desktop Bottom Promotion