For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீட்ரூட் மசாலா தோசை

By Maha
|

உருளைக்கிழங்கு கொண்டு மசாலா தோசை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் பீட்ரூட் கொண்டு மசாலா தோசை செய்ததுண்டா? இங்கு அந்த பீட்ரூட் மசாலா தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை காலை வேளையில் செய்து சாப்பிட்டால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய எனர்ஜியானது கிடைக்கும்.

சரி, இப்போது அந்த பீட்ரூட் மசாலா தோசையின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Beetroot Masala Dosa Recipe For Breakfast

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 1 கப்

மசாலாவிற்கு...

பீட்ரூட் - 1
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 1
வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பீட்ரூட், உருளைக்கிழங்கு மற்றும் கேரட் சேர்த்து, தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 1-2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் காய்கறிகளை எடுத்து, தோலுரித்து மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் மசித்த காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் மசித்த காய்கறிகளைப் போட்டு கிளறி, அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவைக் கொண்டு தோசை ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, வெந்ததும் நடுவே பீட்ரூட் மசாலாவை வைத்து மடித்து பரிமாற வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டு எடுத்தால், பீட்ரூட் மசாலா தோசை ரெடி!!!

English summary

Beetroot Masala Dosa Recipe For Breakfast

Try this mouth watering beetroot masala dosa recipe for breakfast. It will boost your immunity and and give you energy too. 
Story first published: Thursday, June 19, 2014, 18:02 [IST]
Desktop Bottom Promotion