For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவையான... பீன்ஸ் பொரியல்

By Maha
|

பீன்ஸ் பொரியல், கலோரி குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் உள்ள ஒரு ஆரோக்கியமான டிஷ். அதுமட்டுமல்லாமல், பீன்ஸ் பொரியலானது மிகவும் சுவையானதும் கூட. மேலும் இது செய்வது மிகவும் எளிது. அதிலும் மதிய வேளையில் சாம்பார் மற்றும் பீன்ஸ் பொரியலை செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.

இப்போது பீன்ஸ் பொரியலின் எளிமையான செய்முறையை கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, உங்களின் அனுபவத்தை சொல்லுங்கள்.

Beans Poriyal: Delicious Vegetarian Recipe

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 250 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை:

முதலில் பீன்ஸை கழுவி, அதன் இருமுனைகளையும் அகற்றி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சிறு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய பீன்ஸை போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின்பு அதில் உள்ள அதிகப்படியான நீரை வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து, 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.

பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

அடுத்து பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றிரண்டாக வேக வைத்துள்ள பீன்ஸ் சேர்த்து, வடித்து வைத்துள்ள தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.

தண்ணீர் முழுவதும் வற்றியதும், துருவிய தேங்காய் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி, இறக்கி விடவும்.

இப்போது சுவையான பீன்ஸ் பொரியல் ரெடி!!!

English summary

Beans Poriyal: Delicious Vegetarian Recipe | சுவையான... பீன்ஸ் பொரியல்

Beans Poriyal is a very healthy recipe since it is low in calories and packed with protein. Try this easy and delicious vegetarian recipe of beans poriyal and make your meals interesting.
Desktop Bottom Promotion