For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைத்தண்டு கூட்டு

By Maha
|

சிறுநீரகத்தில் கல் வராமல் இருக்க வேண்டுமானால், வாரம் ஒருமுறையாவது வாழைத்தண்டை உணவில் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை சிறுநீரக கல் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் சிறுநீரக கல் இருப்பவர்கள், தினமும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடித்தால், சிறுநீரகக் கல் கரைந்துவிடும்.

ஆனால் சிறுநீரக கல் வராமல் இருக்க வேண்டுமானால், வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள். இங்கு வாழைத்தண்டைக் கொண்டு செய்யக்கூடிய ஒரு சுவையான அதே சமயம் ஆரோக்கியமான கூட்டு ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

Banana Stem Kootu

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு - 1
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
சாம்பார் மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 டம்ளர்

செய்முறை:

முதலில் வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொண்டு, பின் பாசிப்பருப்பை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய வாழைத்தண்டு, பாசிப்பருப்பு, வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், சீரகப் பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குக்கரில் உள்ள வாழைத்தண்டுடன் சேர்த்தால், சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்!!!

English summary

Banana Stem Kootu

Want to know how to make banana stem/plantain stem kootu in simple way? Here is the recipe. Check out and give it a try.
Story first published: Monday, March 17, 2014, 11:46 [IST]
Desktop Bottom Promotion