For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைத்தண்டு வெந்தயக்கீரை பொரியல்

By Maha
|

சிறுநீரக கற்களால் அவஸ்தைப்படுபவர்கள் வாழைத்தண்டை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதிலும் அதனை வெந்தயக்கீரையுடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால், இன்னும் நல்லது.

இங்கு வாழைத்தண்டு வெந்தயக்கீரை பொரியலின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.

Banana Stem Curry With Methi Recipe

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு - 1 (வட்டமாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
வெந்தயக் கீரை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
முந்திரி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் வாழைத்தண்டை வட்டமாக நறுக்கி, அதில் உள்ள நார் பகுதியை நீக்கிவிட்டு, தண்ணீர் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை வேறொரு அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் முந்திரி பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.

பின்பு அதில வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் பொரித்து வைத்துள்ள வாழைத்தண்டை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி 3-4 நிமிடம் நன்கு பிரட்டி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் வாழைத்தண்டு வெந்தயக்கீரை பொரியல் ரெடி!!!

English summary

Banana Stem Curry With Methi Recipe

Arati duta menthi kura is the original name of this recipe. It is basically a plantain (banana stem) curry which is prepared with methi (fenugreek) leaves.
Story first published: Thursday, November 27, 2014, 12:57 [IST]
Desktop Bottom Promotion