For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேந்திரம் சிப்ஸ்

By Maha
|

கேரளா ஸ்பெஷலான நேந்திரம் சிப்ஸ் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், அதனை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டிலேயே மாலை வேளையில் செய்து சாப்பிடலாம். இதன் செய்முறை மிகவும் எளிமையானது. சின்ன குழந்தைகள் கூட செய்யக்கூடிய வகையில் மிகவும் ஈஸியானது.

சரி, இப்போது அந்த கேரளா ஸ்பெஷல் ஸ்நாக்ஸான, நேந்திரம் சிப்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Banana Chips Recipe

தேவையான பொருட்கள்:

நேந்திரங்காய் - 1
மஞ்சள் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் நேந்திரங்காயை தோலுரித்து, அதனை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கப் தண்ணீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த தண்ணீரில் நறுக்கிய நேந்திரங்காய் துண்டுகளைப் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு அதனை வெளியே எடுத்து, நறுக்கிய நேந்திரங்காய் துண்டுகளை நன்கு உலர வைக்க வேண்டும்.

தண்ணீர் முற்றிலும் வற்றியப் பின், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும், உலர வைத்த துண்டுகளைப் போட்டு, நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான நேந்திரம் சிப்ஸ் ரெடி!!!

English summary

Banana Chips Recipe

If you want to prepare the crispy banana chips, here is a simple banana chips recipe that can be enjoyed with onasadhya or even relished like a light snack with coffee or tea.
Story first published: Monday, September 16, 2013, 18:07 [IST]
Desktop Bottom Promotion