For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கம்பு உருளைக்கிழங்கு சப்பாத்தி

By Maha
|

தானியங்களில் ஒன்று தான் கம்பு. பொதுவாக கம்பு கொண்டு கஞ்சி தான் செய்வார்கள். ஆனால் அந்த கம்புவின் மாவைக் கொண்டு சூப்பரான சுவையில் சப்பாத்தி செய்யலாம். மேலும் இந்த கம்பு மாவு பயன்படுத்தி செய்யும் சப்பாத்தியானது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

அத்தகைய கம்பு மாவு கொண்டு செய்யும் சப்பாத்தியுடன் உருளைக்கிழங்கை வேக வைத்து சேர்த்துக் கொண்டால், அது இன்னும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த கம்பு உருளைக்கிழங்கு சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Bajra Aloo Chapati

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 1 கப்
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்தது)
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மாங்காய் தூள், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை 30 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

பின்பு அந்த மாவை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான கம்பு உருளைக்கிழங்கு சப்பாத்தி ரெடி!!!

English summary

Bajra Aloo Chapati

Bajra Aloo Chapati is a healthy breakfast. Know how to make a bajra aloo chapati.
Story first published: Monday, January 27, 2014, 19:24 [IST]
Desktop Bottom Promotion