For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேச்சுலர் ரெசிபி: கோதுமை ரவை உப்புமா

By Maha
|

தற்போது வேலைக்காக வெளியூர்களில் வீடு எடுத்து தங்கி இருக்கும் பேச்சுலர்களின் எண்ணிக்கை அதிகம். அத்தகைய பேச்சுலர்கள் எப்போதும் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவதை விரும்புவதில்லை. மாறாக வீட்டிலேயே சமைத்து சாப்பிட விரும்புகின்றனர்.

அத்தகைய பேச்சுலர்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை காலை வேளையில் சமைப்பதற்கான ஒரு ரெசிபியைக் கொடுத்துள்ளது. அது தான் கோதுமை ரவை உப்புமா. சரி, இப்போது அந்த கோதுமை ரவை உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Upma

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
தண்ணீர் - 2 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்ப, மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாக வதங்கும் வரை வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, பின் கோதுமை ரவையை சேர்த்து, தீயில் மிதமான அளவில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!

English summary

Bachelors Recipe: Wheat Rava Upma

Try out something yummy this morning for breakfast. This wheat rava upma is dedicated for weight watchers. Bachelors also can try this recipe.
Story first published: Friday, March 14, 2014, 9:23 [IST]
Desktop Bottom Promotion