For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நூர் ஜஹானி கோப்தா: அவதி ரெசிபி

By Maha
|

இன்று நாம் அவதி ரெசிபிக்களில் ஒன்றான நூர் ஜஹானி கோப்தா ரெசிபியைப் பற்றி பார்க்கப் போகிறோம். இந்த ரெசிபியானது உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர் கொண்டு செய்யப்படுவது. இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இது முந்திரி பேஸ்ட் கொண்டு செய்யப்படுவதால், இதன் ருசியானது தனித்திருக்கும்.

மேலும் இது சப்பாத்தி, புலாவ் போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும். சரி, இப்போது அவதி ரெசிபியான நூர் ஜஹானி கோப்தாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Awadhi Recipe: Noor Jahani Kofta

தேவையான பொருட்கள்:

கோப்தாவிற்கு...

உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து, மசித்தது)
பன்னீர் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கேரட் - 2 (வேக வைத்து மசித்தது)
உலர் திராட்சை - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

கிரேவிக்கு...

வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி பேஸ்ட் - 1 கப்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

கோப்தாவிற்கு...

முதலில் உருளைக்கிழங்கு மற்றும் பன்னீரை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், உப்பு மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து, அதனை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கேரட்டை வேக வைத்து, அதனை உலர்த்தி, துருவிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் உலர் திராட்சை சேர்த்து பிசைந்து ஒரு பௌலில் வைத்துள் கொள்ள வேண்டும்.

பிறகு உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக எடுத்து, அதன் நடுவே ஓட்டை போட்டு, அதனுள் சிறிது கேரட் கலவையை வைத்து, பின் நன்கு மூடிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கிரேவிக்கு...

கிரேவி செய்வதற்கு வெங்காயத்தை வாணலியில் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்கி, இறக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, முந்தி பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் தண்ணீர் ஊற்றி, குறைவான தீயில் 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்பு உப்பு, கரம் மசாலா சேர்த்து கிளறி, அத்துடன் பொரித்து வைத்துள்ள கோப்தாக்களை சேர்த்து பிரட்டி, 2-3 நிமிடம் கிளறி இறக்கி, பிரஷ் க்ரீம் கொண்டு அலங்கரித்தால், நூர் ஜஹானி கோப்தா ரெடி!!!

English summary

Awadhi Recipe: Noor Jahani Kofta

The Noor Jahani kofta is a vegetarian's delight from the royal kitchens of Awadh. This rich and creamy dish is prepared using cashewnut paste which gives this dish its unique flavour.
Story first published: Monday, May 19, 2014, 13:07 [IST]
Desktop Bottom Promotion