For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரைக்கீரை கடைசல்

By Maha
|

வாரம் ஒருமுறை கீரை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் அனைவருக்கும் நன்கு தெரிந்த கீரையான அரைக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு அரைக்கீரையை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காவிட்டால், அதனை கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

இங்கு அந்த அரைக்கீரை கடைசலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்து மகிழுங்கள்.

Arai Keerai Kadayal

தேவையான பொருட்கள்:

அரைக்கீரை - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4
தக்காளி - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1

செய்முறை:

முதலில் அரைக்கீரையை சுத்தம் செய்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கீரை, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, பூண்டு, பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, கீரையை நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை மத்து கொண்டு நன்கு கடைந்து ஒரு பௌலில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, கீரையுடன் சேர்த்தால், அரைக்கீரை கடைசல் ரெடி!!!

English summary

Arai Keerai Kadayal

Do you know how to prepare arai keerai kadayal in simple way? Here is the recipe. Check out...
Story first published: Monday, November 3, 2014, 13:02 [IST]
Desktop Bottom Promotion