For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறி

By Maha
|

நவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள், விரதத்தை முடித்து சமைத்து சாப்பிடும் போது, அத்துடன் உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறியும் உடன் செய்து, விரதத்தை முடிக்கலாம். ஏனெனில் இந்த ரெசிபியில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த ரெசிபியில் வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் செய்வதால், இது ஒரு சிறப்பான விரதத்தை முடிப்பதற்கு ஏற்ற ரெசிபி என்று சொல்லலாம்.

சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Aloo Paneer Kofta Curry

தேவையான பொருட்கள்:

கோப்தாவிற்கு...

பன்னீர் - 200 கிராம் (துருவியது)
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது)
பாதாம் பவுடர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்ழுன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

குழம்பிற்கு...

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
அரைத்த தக்காளி - 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கோப்தாவிற்கு...

முதலில் ஒரு பௌலில் எண்ணெயை தவிர்த்து, கோப்தாவிற்கு கொடுத்த மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குழம்பிற்கு...

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் இஞ்சி பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, சாட் மசாலா, மிளகு தூள், சோம்பு தூள், கரம் மசாலா ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் அரைத்த தக்காளி சேர்த்து சிறிது நேரம் கிளறி விட்டு, அதில் பாதாம் பவுடர், உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பொரித்து வைத்துள்ள கோப்தாக்களை போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறி ரெடி!!!

English summary

Aloo Paneer Kofta Curry For Navratri

Aloo paneer kofta curry is a delicious vegetarian recipe which is a must try during this Navratri. It is also an excellent option for you to eat after breaking the Navratri fast.
Story first published: Monday, April 7, 2014, 11:46 [IST]
Desktop Bottom Promotion