For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெங்காயம் சேர்க்காத உருளைக்கிழங்கு குழம்பு

By Maha
|

பொதுவாக ஏதேனும் பண்டிகை என்றால், பெரும்பாலான வீடுகளில் வெங்காயம் மற்றும் பூண்டை சமையலில் சேர்க்காமல் சமைப்பார்கள். குறிப்பாக ஹோலி பண்டிகைக்கு இத்தகைய பொருட்களை சமையலில் சேர்க்கவே மாட்டார்கள். எனவே அத்தகைய பண்டிகையின் போது, அனைவருக்கும் பிடித்த காய்கறியான உருளைக்கிழங்கை கொண்டு, ஈஸியான முறையில் குழம்பு செய்து சாப்பிட்டலாம்.

இப்போது அந்த வகையில் வெங்காயம் சேர்க்காமல் உருளைக்கிழங்கு குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Aloo Curry Without Onions: Holi Spl

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4-5 (வேக வைத்து, தோலுரித்து, நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது)
பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

ஒரு பௌலில் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து, அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு கொதி விட்டு, பின் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதித்ததும், அதில் உருளைக்கிழங்கை போட்டு, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, இறக்க வேண்டும்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு குழம்பு ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

English summary

Aloo Curry Without Onions: Holi Spl | வெங்காயம் சேர்க்காத உருளைக்கிழங்கு குழம்பு

Many people do not prepare onions and garlic recipes on Hindu festivals like Holi. So, check out the aloo curry without onions and garlic.
Desktop Bottom Promotion