For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட்

By Maha
|

பொதுவாக டோஸ்ட்டர் கொண்டு தான் பிரட் டோஸ்ட் செய்வோம். ஆனால் டோஸ்ட்டர் இல்லாதவர்கள், வீட்டில் உள்ள தோசைக்கல்லைக் கொண்டே அருமையான முறையில் பிரட் டோஸ்ட் செய்யலாம். அதிலும் இங்கு காலை வேளையில் சீக்கிரம் செய்யும் வகையில் உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட்டின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள். மேலும் இந்த ரெசிபி பேச்சுலர்களுக்கும், அலுவலகத்திற்கு செல்வோருக்கும் ஏற்ற ரெசிபி. சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

Aloo Bread Toast: Breakfast Recipe

தேவையான பொருட்கள்:

பிரட் - 8 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 5-6 (வேக வைத்து, தோலுரித்தது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
பச்சை பட்டாணி - 1 கையளவு (வேக வைத்தது)
கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் கேரட், பச்சை மிளகாய், குடைமிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து, தீயை குறைவில் வைத்து 6-7 நிமிடம் பிரட்ட வேண்டும்.

பின்பு உப்பு, பச்சை பட்டாணி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி இறக்கி விட வேண்டும்.

அடுத்து ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். கல் சூடாவதற்குள், பிரட்டுகளில் உருளைக்கிழங்கு மசாவை பரப்பி, அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட்டையும் செய்து கொள்ள வேண்டும்.

கல்லானது நன்கு சூடானதும், கல்லில் நெய்யை தடவி, செய்து வைத்துள்ள பிரட்டுகளை போட்டு, முன்னும் பின்னும் நெய் தடவி பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும்.

English summary

Aloo Bread Toast: Breakfast Recipe

Here is a simple aloo bread toast recipe which is an ideal and filling breakfast recipe. Instead of using the toaster, try something different to treat your taste buds. This aloo toast is roasted on the heated tawa (griddle) using butter or ghee. Take a look...
Story first published: Thursday, December 5, 2013, 19:58 [IST]
Desktop Bottom Promotion