For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்கி ரொட்டி

By Maha
|

கர்நாடகாவில் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான ஒரு காலை உணவு தான் அக்கி ரொட்டி. இது எப்படி சாதாரணமாக கோதுமை மாவை வைத்து ரொட்டி செய்வோமோ, அதேப் போன்று தான், ஆனால் இது அரிசி மாவை வைத்து செய்யக்கூடியது. 'அக்கி' என்றால் அரிசி. எனவே அரிசி மாவை வைத்து ரொட்டி செய்வதால், இதற்கு அக்கி ரொட்டி என்ற பெயர் வந்தது.

பொதுவாக இதை கூர்க் மக்கள் தான் அதிகம் சாப்பிடுவார்கள். தற்போது அந்த அக்கி ரொட்டியை வீட்டிலேயே ஈஸியாக செய்து சாப்பிடலாம். சரி, அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Akki Roti: Breakfast Recipe
தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
அவரை - 1/2 கப் (வேக வைத்து மசித்தது)
தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 1 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் இதர அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ள வேண்டும்.

பின் அதில் தண்ணீரை மெதுவாக ஊற்றி, மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் பிசைந்து, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, அதில் அந்த மாவுக் கலவையில் சிறிதை எடுத்து ஓரளவு தட்டையாக ரொட்டி போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள ரொட்டியைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான அக்கி ரொட்டி ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

English summary

Akki Roti: Breakfast Recipe | அக்கி ரொட்டி

Akki roti is one of the famous and authentic Karnataka breakfast recipe. This is a very healthy breakfast, as very less amount of oil is used in the preparation.
Story first published: Thursday, February 14, 2013, 17:35 [IST]
Desktop Bottom Promotion