For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஆரஞ்சு சாக்லெட் கேக்

By Neha Mathur
|

கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் கிறிஸ்துமஸ் அன்று என்ன செய்யலாம் என்று யோசிப்பார்கள். குறிப்பாக என்ன கேக் செய்யலாம் என்று யோசிப்பார்கள். அப்படி நீங்கள் யோசித்தால், இந்த வருடம் ஆரஞ்சு சாக்லெட் கேக் செய்யுங்கள்.

இந்த கேக் செய்வது மிகவும் எளிமையானது. மேலும் மிகுந்த சுவையுடனும் இருக்கும். சரி, இப்போது அந்த ஆரஞ்சு சாக்லெட் கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா - 200 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
உப்பில்லா வெண்ணெய் - 200 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
முட்டை - 4
ஆரஞ்சு ஜூஸ் - 1/2 கப்
துருவிய ஆரஞ்சு தோல் (Orange zest) - 2 டீஸ்பூன்

பிராஸ்டிங்...

க்ரீம் - 1 1/2 கப்
சர்க்கரை பவுடர் - 2 கப்
பாதி இனிப்புள்ள சாக்லெட் - 150 கிராம்
உப்பில்லா வெண்ணெய் - 50 கிராம்
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேக் செய்முறை

கேக் செய்முறை

முதலில் மைக்ரோ வேவ் ஓவனை 170 டிகிரி C யில் சூடேற்ற வேண்டும்.

பின்னர் 8 இன்ச் பேனில் மைதாவை லேசாக தடவி விட வேண்டும்.

பின்பு ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கேக் செய்முறை

கேக் செய்முறை

பின் மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறைந்தது 4-5 நிமிடமாவது அடிக்க வேண்டும்.

அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, பின் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் துருவிய ஆரஞ்சு தோலை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

கேக் செய்முறை

கேக் செய்முறை

இறுதியில் மைதா மாவு கலவையை போட்டு நன்கு கட்டி இல்லாதவாறு கலந்து, பின் அதனை பேனில் ஊற்றி, மைக்ரோ வேவ்வில் 40-45 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். குறிப்பாக அப்படி எடுத்த பின், ஒரு டூத் பிக்கை அதனுள் விட்டு எடுக்கும் போது மாவு இல்லாமல் சுத்தமாக வருகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி டூத் பிக்கில் மாவு ஒட்டியிருந்தால், இன்னும் சிறிது நேரம் மைக்ரோ வேவ்வில் வைத்து எடுக்க வேண்டும்.

பிறகு அதனை மைக்ரோ வேவ்வில் இருந்து எடுத்து, 5 நிமிடம் குளிர வைத்து, பின் அதனை பேனில் இருந்து எடுத்து, ஒரு கம்பி ரேக்கில் வைக்க வேண்டும்.

பிராஸ்டிங் செய்முறை

பிராஸ்டிங் செய்முறை

ஒரு பேனில் சாக்லெட் மற்றும் வெண்ணெய் போட்டு ருக வைக்க வேண்டும்.

பின் அது உருகியதும், அதனை இறக்கி அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

பிராஸ்டிங் செய்முறை

பிராஸ்டிங் செய்முறை

பிறகு ஒரு பௌலில் வெண்ணிலா எசன்ஸ், சர்க்கரை பொடி மற்றும் க்ரீம் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பிராஸ்டிங் செய்முறை

பிராஸ்டிங் செய்முறை

கலவையானது நன்கு உப்பி வரும் போது, அதில் உருக வைத்து குளிர வைத்துள்ள சாக்லெட்டை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

அலங்காரம்

அலங்காரம்

இறுதியில் கம்பி ரேக்கில் உள்ள கேக்கை இரண்டு லேயர்களாக வெட்டி, ஒரு லேயரை தனியாக ஒரு தட்டில் வைத்து, பின் அதன் மேல் பிராஸ்டிங்கை பரப்பி விட வேண்டும்.

அலங்காரம்

அலங்காரம்

பின்பு அதற்கு மேலே தனியாக வைத்துள்ள மற்றொரு கேக் லேயரை வைத்து, அதன் மேல் மீதமுள்ள பிராஸ்டிங்கை பரப்பி, வேண்டியவாறு துருவிய சாக்லெட் மற்றும் ஆரஞ்சு துண்டுகளைக் கொண்டூ அலங்கரித்தால், ஆரஞ்சு சாக்லெட் கேக் ரெடி!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

X Mas Spcl: Orange Cake With Chocolate

Christmas is on the way. Cake is an inevitable part of christmas. Here is the recipe of Orange Chocolate Cake.
Story first published: Monday, December 9, 2013, 16:01 [IST]
Desktop Bottom Promotion