For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: செர்ரி மற்றும் ரம் கேக்

By Neha Mathur
|

செர்ரிப் பழம் ரொம்ப பிடிக்குமானால், அதனைக் கொண்டு இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அருமையான கேக் செய்து மகிழுங்கள். மேலும் இந்த செர்ரி மற்றும் ரம் கேக் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. இதனால் அனைவரும் முயற்சி செய்யக்கூடிய ஒரு சூப்பரான கேக்.

இங்கு அந்த செர்ரி மற்றும் ரம் கேக்கின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அது எப்படியென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மைதா - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
தயிர் - 1 கப்
முட்டை - 3
வெஜிடேபிள் ஆயில் - 100 கிராம்
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
செர்ரி - 1 கப் (விதைகளை நீக்கி நறுக்கியது) மற்றும் சிறிது நறுக்கிய செர்ரி பழங்கள் அலங்கரிக்க

சிரப் செய்வதற்கு...

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
ரம் - 2 டேபிள் ஸ்பூன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்முறை

செய்முறை

* முதலில் மைக்ரோ ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்ற வேண்டும்.

* பின் 8 இன்ச் பேனில் வெண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை

செய்முறை

* மற்றொரு பௌலில் சர்க்கரை, தயிர், முட்டை, எண்ணெய் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் மைதா கலவையை சேர்த்து கட்டி சோராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை

செய்முறை

* பின் நறுக்கி வைத்துள்ள செர்ரிப் பழங்களை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து அதனை வெண்ணெய் தடவி பேனில் ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 20 நிமிடம் பேக் செய்து வெளியே எடுக்க வேண்டும்.

செய்முறை

செய்முறை

* பின்னர் அலங்கரிக்க வைத்துள்ள செர்ரிப் பழங்களை அதன் மேல் தூவி, மீண்டும் 30-35 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.

* 35 நிமிடம் ஆகி கேக்கை வெளியே எடுத்தப் பின்னர், அதில் ஒரு டூத் பிக் கொண்டு குத்திப் பார்த்தில், டூத் பிக்கில் மாவு ஒட்டவில்லையெனில், கேக் ரெடியாகிவிட்டதென்று அர்த்தம்.

செய்முறை

செய்முறை

* பின்பு அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து, 5 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.

* அதற்குள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, சர்க்கரை கரையும் வரை அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்ததும் அதனை இறக்கி, அதில் ரம்மை ஊற்றி கிளறி விட வேண்டும்.

செய்முறை

செய்முறை

* இறுதியில் குளிர வைத்துள்ள கேக்கை ஒரு தட்டில் வைத்து, கேக் வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் அந்த சர்க்கரை சிரப்பை கேக்கின் மேல் ஊற்ற வேண்டும்.

செய்முறை

செய்முறை

* பின் கேக்கானது சர்க்கரை சிரப்பை உறிஞ்சுமாறு ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அதன் மேல் சர்க்கரை பொடியைத் தூவினால், சுவையான செர்ரி மற்றும் ரம் கேக் ரெடி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

X Mas Spcl: Fresh Cherry & Rum Cake

To make a cherry cake even more interesting, I added a soaking syrup with rum in it. The cake turned out super soft and flavorful and the kick from the rum gave it another level. So here is how I made it.
Story first published: Monday, December 23, 2013, 17:36 [IST]
Desktop Bottom Promotion