For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெரளி கொழுக்கட்டை - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

|

விநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரது வீட்டிலும் விநாயகரை வாங்கி வணங்க ஆசைப்படுவோம். விநாயகரை வீட்டில் வைத்தால், மூன்று வேளையும் அவருக்கு ஸ்பெஷலான பலகாரம் எதையேனும் செய்து படைக்க வேண்டும்.

இங்கு விநாயருக்கு பிடித்த கொழுக்கட்டையில் ஒரு வகையான தெரளி கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து விநாயருக்கு படையுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
வெல்லம் - 2 கப் (தட்டி பொடியாக்கியது)
தண்ணீர் - 2 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் பொடி - 2 டீஸ்பூன்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி சூடேற்றி, வெல்லம் கரைந்த பின் இறக்கி, வடிகட்டி மீண்டும் அதே வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

பின்னர் அத்துடன் தேங்காய், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து கிளறி, அரிசி மாவை மெதுவாக சேர்த்து ஓரளவு கெட்டியாகவும் கரை கிளறி விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, தெரளி இலையில் வைத்து சுருட்டி, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.

பிறகு இட்லி பாத்திரத்தினுள் தட்டை வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தெரளி கொழுக்கட்டை ரெடி!!!

Image Courtesy: yummytummyaarthi

English summary

Therali Kozhukattai - Ganesh Chaturthi Special

Did you know about therali kozhukattai? Here is the recipe. Check out and give it a try...
Desktop Bottom Promotion