For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தித்திக்கும்... ரவா கேசரி

By Maha
|

Rava Kesari With Dry Fruits
கேசரி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாக கேசரியை ஏதேனும் பண்டிகை என்றால் தான் செய்வார்கள். ஆனால் இந்த கேசரியை பண்டிகையின் போது மட்டுமின்றி, மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அதிலும் இதில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பிஸ்தா போன்றவற்றால் அலங்கரித்து கொடுத்தால், கேசரி பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

இப்போது அந்த தித்திக்கும் ரவா கேசரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
உலர் திராட்சை - 7-8
முந்திரி - 10
பிஸ்தா - 3-4
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 கப்
நெய் - 1/2 கப்

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

ரவை பொன்னிறத்தில் வந்ததும், அதில் தண்ணீர் ஊற்றி, ரவை தண்ணீரை உறிஞ்சும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.

தண்ணீர் வற்றியதும், அதில் மீதமுள்ள நெய் ஊற்றி நன்கு அல்வா பதத்திற்கு வந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறி, இறுதியில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விட்டு இறக்க வேண்டும்.

இப்போது தித்திக்கும் ரவா கேசரி ரெடி!!! இதன் மேல் முந்திரி, பிஸ்தா மற்றும் உலர் திராட்சை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

English summary

Rava Kesari With Dry Fruits | தித்திக்கும்... ரவா கேசரி

There are many Indian sweet dishes that can be prepared instantly. There are many simple kesari recipes that you can prepare for evening snack. Check out the Rava Kesari recipe, a filling Indian sweet dish for snacks.
Story first published: Wednesday, April 3, 2013, 17:43 [IST]
Desktop Bottom Promotion