For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கான... பொரி உருண்டை ரெசிபி

By Maha
|

பொதுவாக பொரி உருண்டையை கடைகளில் தான வாங்கி சாப்பிடுவோம். அதிலும் கிராமங்களுக்கு சென்றால் அங்கு மிகவும் விலை மலிவில் பொரி உருண்டையானது கிடைக்கும். ஆனால் நகர்புறங்களில் இவை கிடைப்பது மிகவும் கடினம். அப்படி கிடைத்தாலும், விலை அதிகமாக இருக்கும்.

ஆகவே அந்த பொரி உருண்டையை கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா! இங்கு அந்த பொரி உருண்டையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சாப்பிடுங்கள்.

Mumura Laddu/Pori Urundai Recipe

தேவையான பொருட்கள்:

பொரி - 500 கிராம்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் - 2
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி சூடானதும், வெல்லத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து 5-10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

வெல்லப் பாகு தயாராகிவிட்டதா என்பதை பார்க்க, ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு துளி வெல்லப் பாகுவை விடும் போது, பாகுவானது பந்து போன்று மிதக்க ஆரம்பித்தால், பாகு தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

அப்படி பாகு தயாராகிவிட்டால், ஏலக்காய் மற்றும் பொரியை பாகுவுடன் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 2-3 நிமிடம் கிளறினால், பொரியானது பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்திருக்கும்.

பின்பு பாத்திரத்தை இறக்கி, கலவை குளிர வைக்க வேண்டும். மேலும் கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளை நீரில் நனைத்து, பின் கலவையை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து, நன்கு குளிரை வைத்தால், பொரி உருண்டை ரெடி!!!

English summary

Mouthwatering Mumura Laddu/Pori Urundai Recipe For Kids

Mumura laddu/pori urundai is a famous sweet which is loved by all ages. This Mumura laddu is made from jaggery and puffed rice, much better than chocolate too.
Story first published: Monday, June 23, 2014, 17:55 [IST]
Desktop Bottom Promotion