For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதினா ஜூஸ்

By Maha
|

Mint/Pudina Juice Recipe For Summer!
கோடையில் உடல் மிகுந்த வெப்பத்துடன் இருக்கும். இந்த வெப்பத்தை தணிப்பதற்கு தண்ணீர் மட்டும் போதாது, ஒருசில ஜூஸ்களையும் குடிக்க வேண்டும். அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் புதினா. அத்தகைய புதினாவை வைத்து, வித்தியாசமான சுவையில் ஒரு ஜூஸை போட்டு குடித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடனும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

இப்போது அந்த புதினா ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

புதினா இலை - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 3 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் புதினா இலையை தண்ணீர் விட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் எலுமிச்சை சாறு, சீரகப் பொடி, மிளகு தூள், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, ஸ்பூன் வைத்து கிளறி, குளிர வைத்து பின் பரிமாறினால், சூப்பரான புதினா ஜூஸ் ரெடி!!!

English summary

Mint/Pudina Juice Recipe For Summer! | புதினா ஜூஸ்

As it is summer, you would like to prepare something which cools your throat and relaxes your mood. Try having mint juice which is not only good for health but also a rejuvenating drink.
Story first published: Friday, May 3, 2013, 18:34 [IST]
Desktop Bottom Promotion