For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலாய் சம் சம் ஸ்வீட்

By Maha
|

Malai Chum Chum
மலாய் சம் சம் என்பது ஒரு வகையான இனிப்பு. இது பெங்காலியில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்வீட். இந்த ஸ்வீட்டை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இப்போது அந்த மலாய் சம் சம் ஸ்வீட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 4-5 கப்
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்

மலாய்க்கு...

பால் - 2-3 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

அலங்கரிக்க...

பிஸ்தா - 1 டீஸ்பூன் (துருவியது)
பாதாம் - 3-4 (நறுக்கியது)
குங்குமப்பூ - 1 சிட்டிகை

செய்முறை:

ஒரு பௌலில் பன்னீரை போட்டு, வெதுவெதுப்பான நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த பன்னீரை கொஞ்சம் எடுத்து நீள்வட்ட வடிவில் உருட்டி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் போது அதில் சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து, தீயைக் குறைவில் வைத்து பாகு போன்று வந்ததும், நீள்வட்டமாக உருட்டி வைத்துள்ள பன்னீரை மெதுவாக போட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும்.

பிறகு தீயைக் குறைவில் வைத்து, பாத்திரத்தை 5-10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இந்த நேரத்தில் பன்னீரானது மெதுவாக அந்த பாகுவை உறிஞ்சி பெரிதாக மாறும். அப்போது மூடியைத் திறந்து, மீண்டும் கொதிக்க விட வேண்டும்.

பன்னீரானது மென்மையாக ஸ்பாஞ்ச் போன்று வந்ததும், அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

மலாய் செய்வதற்கு...

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி, தீயை குறைவில் வைத்து, பால் பாதியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

பாலானது கெட்டியானதும், அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் 2 நிமிடம் சர்க்கரை கரையும் வரை கொதிக்க விட வேண்டும்.

பால் கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு, குளிர வைக்க வேண்டும்.

அடுத்து அந்த நீள்வட்ட பன்னீரை நடுவில் வெட்டி, அதில் இந்த கெட்டியான பாலை ஊற்றி, நிரப்ப வேண்டும்.

பின்னர் அதன் மேல் பிஸ்தா, பாதாம் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அலங்கரிக்க வேண்டும்.

இப்போது சுவையான மலாய் சம் சம் ஸ்வீட் ரெடி!!!

English summary

Malai Chum Chum: Sweet Dish | மலாய் சம் சம் ஸ்வீட்

Chum chum is a spongy Indian sweet dish. It is a popular Bengali sweet dish that can be made in different colours. Check out the recipe to make malai chum chum recipe.
Story first published: Friday, January 4, 2013, 16:31 [IST]
Desktop Bottom Promotion