For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் ஸ்டைல்: எஸ்பிரசோ காபி

By Maha
|

காபியில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அத்தகைய காபியில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே அடங்கியுள்ளன. அதிலும் பெரும்பாலானோர் காபி குடிப்பது தீமை என்று மட்டும் தான் நினைக்கின்றனர். ஆனால் அந்த காபியை காலையில் எழுந்ததும் குடித்தால், உடல் புத்துணர்ச்சி பெறும்.

குறிப்பாக காபியை அளவுக்கு அதிகமாக குடித்தால் மட்டும் தான், உடலுக்கு தீங்கு விளையுமே தவிர, அளவாக பருகினால் நன்மை கிட்டும். இப்போது அந்த காபியில் ஒரு வகையான எஸ்பிரசோ காபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Indian Style Espresso Coffee Recipe

தேவையான பொருட்கள்:

காபி பவுடர் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பால் - 1 கப்
சுடுநீர் - 1 டேபிள் ஸ்பூன்
சாக்லெட் பவுடர் - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு கப்பில் காபி பவுடர் மற்றும் சர்க்கரையைப் போட்டு, சிறிது சுடுநீர் ஊற்றி, ஸ்பூன் கொண்டு பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் பாலை நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை அந்த கப்பில் சற்று மேலே தூக்கி நுரை வருமாறு ஊற்ற வேண்டும்.

இறுதியில் அதில் சாக்லெட் பவுடர் தூவினால், சூப்பரான எஸ்பிரசோ காபி ரெடி!!! இதனை காலையில் குடித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

English summary

Indian Style Espresso Coffee Recipe

The aroma and flavour of a freshly brewed cup of hot coffee is always mesmerising. We all love to relax and freshen our mood with a cup of coffee. There are many coffee recipes across the world that change the flavour and appearance of the hot beverage. If you love coffee and want to add some Indian touch to the recipe, then try this espresso.
Story first published: Tuesday, August 27, 2013, 19:05 [IST]
Desktop Bottom Promotion