For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுதந்திர தின ஸ்பெஷல் ரெசிபி

By Maha
|

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினமானது கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 67 ஆவது சுதந்திர தினம் என்பதால், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒர அருமையான முறையில் சுதந்திர தின வாழ்த்துக்களை வீட்டில் உள்ளோருக்கும், விருந்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். அது வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களுக்கு சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அத்தகைய சமையல் மூலமாகவே, சூப்பரான ஒரு டிஷ் செய்து வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், நமது இந்திய தேசியக் கொடியை மையமாக வைத்து செய்யப்படுவது தான். ஆம், எப்படி இந்திய தேசியக் கொடியில் பச்சை, வெள்ளை, ஆரஞ்சு நிறங்கள் உள்ளதோ, அதேப் போன்றே இந்த ரெசிபியும் இருக்கும். சரி, இப்போது அந்த சுதந்திர தின ஸ்பெஷல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

பச்சை நிற லேயருக்கு...

அரைத்த கிவி பழம் - 1/2 கப்

தண்ணீர் - 1 1/2 கப்

ஜெல்லடின் (Gelatin) - 2 டீஸ்பூன்

வெள்ளை நிற லேயருக்கு...

க்ரீம் - 2 கப்

சர்க்கரை - தேவையான அளவு

ஜெல்லடின் (Gelatin) - 2 டீஸ்பூன்

ஆரஞ்சு நிற லேயருக்கு...

நன்கு அடித்த க்ரீம் - 1 கப்

சர்க்கரை - தேவையான அளவு

மாம்பழ கூழ் - 1 கப்

ஆரஞ்சு நிற கேசரி பவுடர் - 1 சிட்டிகை

பச்சை நிற லேயரின் செய்முறை:

பச்சை நிற லேயரின் செய்முறை:

முதலில் ஜெல்லடினை 1/4 கப் தண்ணீரில் கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பேனில் அரைத்த கிவி மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

கலவையானது சூடானதும், அதில் ஜெல்லடினை ஊற்றி, அடுப்பில் இருந்து இறக்கி நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி 5-6 மணிநேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இதனால் அது ஜெல் போன்று ஆகிவிடும்.

வெள்ளை நிற லேயரின் செய்முறை:

வெள்ளை நிற லேயரின் செய்முறை:

இந்த லேயருக்கும் ஜெல்லடினை 1/4 கப் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் க்ரீம் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கலந்து, அடுப்பில் இருந்து இறக்கி, அதில் ஜெல்லடினை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதனை மற்றொரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, 5-6 மணிநேரம் ப்ரீசரில் வைக்க வேண்டும். இதனால் அதுவும் ஜெல் போன்றாகிவிடும்.

ஆரஞ்சு நிற லேயரின் செய்முறை:

ஆரஞ்சு நிற லேயரின் செய்முறை:

நன்கு அடித்து வைத்துள்ள க்ரீம்மில் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் மாம்பழ கூழை ஊற்றி, கேசரி பவுடர் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும்.

பிறகு அதனையும் மற்றொரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, 2-3 மணிநேரம் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும்.

அலங்கரிப்பு...

அலங்கரிப்பு...

மேற்கூறியவாறெல்லாம் செய்த பின்னர், சுதந்திர தினத்தன்று வீட்டில் உள்ளோருக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ, அழகான கண்ணாடி டம்ளரில் முதலில் பச்சை நிற ஜெல்லியைப் போட்டு, பின் வெள்ளை நிறத்தை போட்டு, இறுதியில் ஆரஞ்சு நிற கலவையைப் போட்டு கொடுத்து, சுதந்திர தின வாழ்த்துக்களை வித்தியாசமாக தெரிவிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy : Neha Mathur

English summary

Independence Day Special Recipe

This year while India celebrates its 67th Independence Day, we dedicate this tri-colour recipe to give our readers.
Story first published: Wednesday, August 14, 2013, 16:15 [IST]
Desktop Bottom Promotion