For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்னாசி ஜூஸ்

By Maha
|

How to Make Pineapple Juice
அன்னாசிப்பழம் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களுள் ஒன்று. அத்தகைய அன்னாசி பழம் சாப்பிடுவதற்கு கடுமையாக இருந்தால். அதனை ஜுஸ் செய்து குடிக்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் ப்ரோமேளின் உள்ளது. இது செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி இதில் வைட்டமின் சி உள்ளது. இந்த ஜூஸ் குடித்தால் பசியும் எடுக்காது. இதை நாம் தயாரிக்கும் போது சர்க்கரை அதிகம் போட வேண்டிய அவசியமில்லை. இந்த பானம் ரசாயன பொருள் எதுவும் இல்லாத சத்தான பானம். இந்த அன்னாசி ஜூஸை செய்வது மிகவும் சுலபமானது.

தேவையான பொருள்கள்:

அன்னாசிப் பழம் - 1
சர்க்கரை - 2 டீஸ்பூன் (10 கிராம்)

செய்முறை:

* அன்னாசி பழத்தின் இலைகள் மற்றும் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

* பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* நறுக்கிய அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* தேவையெனில் 2 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு அரைக்கும் போது சர்க்கரையை சேர்த்தால், இனிப்பு சுவை அதிகமாகி, புளிப்பு சுவையானது குறையும்.

* அரைத்த பானத்தை 1-3 நிமிடம் நன்கு கலக்கவும்.

* பானத்தை ஒரு டம்பளரில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்பு:

தேவையெனில் இத்துடன் ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறலாம்.

English summary

How to Make Pineapple Juice | அன்னாசி ஜூஸ்

Pineapple juice is a delicious and healthy drink.When you make juice yourself, you don't have to put in so much sugar, and your juice will be free of preservatives, but most importantly, the juice will be fresh and nutritious.
Desktop Bottom Promotion