For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈஸியான... வென்னிலா ஐஸ் க்ரீம்

By Maha
|

பொதுவாக அனைவருக்குமே ஐஸ் க்ரீம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் வென்னிலா தான் பலருக்கு பிடித்தமானது. இத்தகைய வென்னிலா ஐஸ் க்ரீமை இதுவரை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். இப்போது அதனை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம்.

இவ்வாறு வீட்டில் செய்வதால், பணம் மிச்சமாவதோடு, பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பொழுது அந்த வென்னிலா ஐஸ் க்ரீமை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Homemade Vanilla Ice Cream Recipe

தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்
பால் பவுடர் - 1 கப் (இனிப்பில்லாதது)
ப்ரஷ் க்ரீம் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப் ( அரைத்து பொடி செய்தது)
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பாலை நன்கு கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் பாலுடன், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு, ப்ரீசரில் நன்கு கெட்டியாகும் வரை வைக்க வேண்டும்.

பிறகு அது கெட்டியானதும், அதனை வெளியே எடுத்து, வேறொரு பௌலில் போட்டு, லேசாக உருகிய நிலையில் அதனை பரிமாறினால், எளிமையான வென்னிலா ஐஸ் க்ரீம் ரெடி!!!

English summary

Homemade Vanilla Ice Cream Recipe | ஈஸியான... வென்னிலா ஐஸ் க்ரீம்

The homemade ice cream recipe is low in fat and can be relished even by the aged. Tasty vanilla essence with fresh cream can simply water your mouth and so why wait? Take a look at how to go about with the homemade vanilla ice cream recipe.
Story first published: Tuesday, April 23, 2013, 16:49 [IST]
Desktop Bottom Promotion