For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ

By Maha
|

குளிர்ச்சியான வானிலையின் போது, நன்கு சூடாகவும், உடலுக்கு இதமாகவும் இருக்க டீ போட்டு குடித்தால் நன்றாக இருக்கும். அதிலும் சாதாரண பால் டீயை விட, மூலிகை டீ போட்டு குடித்தால், குளிர்ச்சியான வானிலையின் போது ஏற்படும் இருமல், ஜலதோஷம் போன்றவை வராமல் இருக்கும்.

அதிலும் அக்காலத்தில் இருமலைப் போக்கப் பயன்படும் கற்பூரவள்ளியைக் கொண்டு டீ போட்டு குடித்தால், இன்னும் நன்றாக இருக்கும். இப்போது அந்த கற்பூரவள்ளி டீயை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Healthy Oregano Tea Recipe

தேவையான பொருட்கள்:

உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
தேன் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் கற்பூரவள்ளி இலையைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த இலையை நீக்கி விட்டு, அதனை மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.

பின் அதில் தேவையான அளவு தேனை சேர்த்து கலந்தால், சுவையான கற்பூரவள்ளி டீ ரெடி!!!

குறிப்பு:

உலர்ந்த கற்பூரவள்ளி இலையை அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் போதே போட வேண்டாம். இல்லாவிட்டால், அது டீயின் சுவையையே மாற்றிவிடும்.

ஒருவேளை உலர்ந்த கற்பூரவள்ளி இலை கிடைக்காவிட்டால், பச்சை இலையை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, தேன் சேர்த்து குடிக்கலாம்.

English summary

Healthy Oregano Tea Recipe

Oregano tea recipe is a very easy and the herbal tea can be prepared within a few minutes. All you need to prepare oregano tea recipe is, the fresh oregano herbs, hot water and honey. Check out the delicious and herbal, oregano tea recipe.
Story first published: Saturday, November 16, 2013, 16:01 [IST]
Desktop Bottom Promotion