For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இஞ்சி பிரட் லோஃப் கேக்

By Neha Mathur
|

டிசம்பர் மாதம் வந்தாலே, அனைவருக்கும் மனதில் சந்தோஷம் அதிகமாக இருக்கும். ஏனெனில் கிறிஸ்துமஸ் பண்டிகை, புதுவருடப் பிறப்பு போன்றவை வருவதால், அனைவரும் வீட்டில் கொண்டாடுவதற்காக பல்வேறு இனிப்புக்களை செய்வார்கள். அதிலும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதோ அல்லது புதுவருடப் பிறப்பின் போதோ, நிச்சயம் அனைவரும் கேக் வெட்டுவோம்.

அப்படி கேக் வெட்டுவதாக இருந்தால், இந்த வருடம் சிறப்பானதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்க வேண்டுமானால், வீட்டிலேயே கேக் செய்யுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இஞ்சி பிரட் லோஃப் கேக்கின் செய்முறை மிகவும் எளிமையாக இருப்பதால், இதனை இந்த வருடம் முயற்சி செய்யுங்கள். சரி, இப்போது அந்த இஞ்சி பிரட் லோஃப் கேக் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மைதா - 1 1/2 கப்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பொடி - 1 டேபிள் ஸ்பூன்
கிராம்பு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு -1/4 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2-3 துளிகள்
உப்பில்லா வெண்ணெய் - 115 கிராம்
நாட்டுச்சர்க்கரை - 1 1/2 கப்
தண்ணீர் - 3 டேபிள் ஸ்பூன்
முட்டை - 2
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்முறை

செய்முறை

* முதலில் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்ற வேண்டும்.

* பின் பிரட் லோஃப் பேனில் வெண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை

செய்முறை

* பின்பு ஒரு பௌலில் மைதா, பேக்கிங் சோடா, பட்டை பொடி, இஞ்சி தூள், கிராம்பு பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் மற்றொரு பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை

செய்முறை

* அடுத்து வேறொரு பௌலில் 1/2 கப் நாட்டுச்சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி, நாட்டுச்சர்க்கரையை கரைய வைக்க வேண்டும்.

* அதற்குள் மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் மீதமுள்ள ஒரு கப் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடிக்க வேண்டும்.

செய்முறை

செய்முறை

* நாட்டுச்சர்க்கரை நன்கு கரைந்த பின்னர், ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்கு அடிக்க வேண்டும்.

* பின் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கிளறி விட வேண்டும்.

செய்முறை

செய்முறை

* இறுதியில் ஒரு அகன்ற பௌலில் பாதி மைதா கலவையை போட்டு, அதில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, வென்னிலா எசன்ஸ் சேர்த்து அடித்து வைத்துள்ள நாட்டுச்சர்க்கரை கலவை மற்றும் வெண்ணெய் கலவையை உடன் சேர்த்து நன்கு கிளறி, பின் மீதமுள்ள மைதா கலவையை சேர்த்து, கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை

செய்முறை

* அடுத்து அந்த மாவை பிரட் லோஃப் பேனில் ஊற்றி, 45-50 நிமிடம் பேக் செய்து, கேக் ரெடி ஆன பின்னர் அதனை இறக்கி 5 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.

செய்முறை

செய்முறை

* பின் அதனை பேனில் இருந்து தட்டிற்கு மாற்றி, அதன் மேல் சர்க்கரை பொடியைத் தூவி, துண்டுகளாக்கிக் கொண்டால், சுவையான இஞ்சி பிரட் லோஃப் கேக் ரெடி!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ginger Bread Loaf Cake Recipe

This traditional Ginger bread is also the synonym of happiness. Moist, spicy with the very flavour of Christmas, this is a must make. Here is the recipe. Check out.
Story first published: Thursday, December 19, 2013, 17:11 [IST]
Desktop Bottom Promotion