For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாம்பழ ஜூஸ்

By Maha
|

கோடைகாலத்தில் மாம்பழம் அதிக அளவில் கிடைக்கும். எனவே அத்தகைய மாம்பழத்தை முடிந்த அளவில் கோடைகாலத்தில் வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள். அதிலும் அதனை வெயிலில் சென்று, வீட்டிற்கு வந்ததும் ஜூஸ் போட்டு குடித்தால், வெப்பத்திற்கு நன்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சரி, இப்போது மாம்பழத்தை வைத்து எப்படி எளிதான முறையில் ஜூஸ் செய்வதென்று பார்ப்போமா!!!

Fresh Mango Juice Recipe

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 1
பால் - 1 கப்
சர்க்கரை - 3-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மாம்பழத்தின் தோலை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட வேண்டும்.

பின்னர் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டியை போட்டு பரிமாற வேண்டும்.

இப்போது சுவையான மாம்பழ ஜுஸ் ரெடி!!!

English summary

Fresh Mango Juice Recipe | மாம்பழ ஜூஸ்

Summer is the only season one can relish fresh homemade ripe mango juice and I make best use of our home grown mangoes.
Desktop Bottom Promotion