தித்திக்கும் சில தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!

By:
Subscribe to Boldsky

தீபாவளி பலகாரங்களை செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா? இந்த வருடம் வித்தியாசமான இனிப்பு பலகாரங்களை முயற்சிக்க ஆசையா? அப்படியெனில் இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு சில வித்தியாசமான தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு பலகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த பலகாரங்கள் அனைத்தும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். மேலும் உங்களுக்கு இந்த பலகாரங்களை எப்படி செய்வதென்று செய்முறையுடன் தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கோதுமை அல்வா

கோதுமை கொண்டு அல்வா செய்ததுண்டா? இல்லையெனில் இந்த வருட தீபாவளிக்கு முயற்சித்துப் பாருங்கள். இது செய்வது மிகவும் சுலபம்.

செய்முறை /recipes/sweets/atta-halwa-diwali-special-recipe-tamil-009654.html

 

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்

இதுவரை சர்க்கரைப் பாகில் ஊற வைத்த குலாப் ஜாமூனைத் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் வெறும் சர்க்கரையில் பிரட்டிய குலாப் ஜாமூனை செய்து சுவைத்திருக்கிறீர்களா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள்.

செய்முறை /recipes/sweets/bread-dry-jamun-recipe-diwali-special-tamil-009629.html

 

வேர்க்கடலை லட்டு

வேர்க்கடலை உடலுக்கு நல்லது. அந்த வேர்க்கடலைக் கொண்டு கூட அற்புதமாக லட்டு செய்து, இந்த தீபாவளியன்று வீட்டில் உள்ளோரை அசத்தலாம்.

செய்முறை /recipes/sweets/peanut-ladoo-recipe-diwali-sweets-006727.html

 

சோள மாவு அல்வா

சோள மாவு கொண்டு அல்வா செய்யலாம் என்பது தெரியுமா? இல்லாவிட்டால், அதை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

செய்முறை /recipes/sweets/corn-flour-halwa-diwali-special-006695.html

 

ஜவ்வரிசி பாயாசம்

பண்டிகை என்றால் நிச்சயம் மதிய வேளையில் பாயாசம் இருக்கும். அதிலும் மதியம் ஜவ்வரிசி பாயாசம் செய்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். அதை எப்படி செய்வதென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை /recipes/sweets/diwali-special-sabudana-payasam-004239.html

 

தேங்காய் லட்டு

சிலருக்கு தேங்காய் லட்டு என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் அதை எப்படி பக்குவமாக செய்வதென்று தெரியாது. நீங்கள் தேங்காய் லட்டு பிரியர் என்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு முயற்சித்துப் பாருங்கள்.

செய்முறை /recipes/sweets/diwali-special-coconut-laddu-004216.html

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diwali Special Sweet Recipes

Here are some diwali special sweet recipes. Take a look...
Story first published: Saturday, November 7, 2015, 15:41 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter