For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேரிச்சம் பழ அல்வா

By Maha
|

பேரிச்சம் பழம் உடலுக்கு மிகவும் சிறந்த ஒரு உலர் பழங்களுள் ஒன்று. அத்தகைய பேரிச்சம் பழத்தை பலர் சாப்பிட மறுப்பார்கள். ஏனெனில் அது மிகவும் இனிப்பாக இருப்பதால், பலர் சத்தானது என்று தெரிந்தும் அதனை வெறுப்பார்கள். அத்தகையவர்களுக்கு பேரிச்சம் பழத்தை சாப்பிட ஒரு சிறந்த வழி உள்ளது. அது என்னவென்றால், அதனை அல்வா போன்று செய்து சாப்பிடலாம்.

இதனால் அதிகப்படியான இனிப்பு தெரியாமல் இருப்பதோடு, உடலுக்கு பல சத்துக்களும் கிடைக்கும். மேலும் இதனை ரம்ஜான் பண்டிகையின் போதும் செய்யலாம். இப்போது அந்த பேரிச்சம் பழ அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Dates Halwa

தேவையான பொருட்கள்:

பேரிச்சம் பழம் - 2 கப் (விதை இல்லாதது)
சூடான பால் - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
பாதாம் - 5-6 (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சூடான பாலில் பேரிச்சம் பழத்தை போட்டு, 3 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தட்டில், 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி தேய்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள பேரிச்சம் பழத்தைப் போட்டு, சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அத்துடன் இன்னும் சிறிது பால் சேர்த்து, 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின் ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி, அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றி, குளிர வைத்து, துண்டுகளாக்கி பரிமாறினால், சுவையான பேரிச்சம் பழ அல்வா ரெடி!!!

English summary

Dates Halwa

Dates halwa is a delicious and nutritious dessert recipe. If the dates you have are hard, then soak them in warm milk for 5-6 hours and then go on with the recipe. Dates halwa is not only delicious but also healthy at the same time since dates are a rich source of iron, vitamins and minerals.
Story first published: Wednesday, August 7, 2013, 17:46 [IST]
Desktop Bottom Promotion