For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்

By Maha
|

நிறைய பேருக்கு சாக்லெட் ப்ளேவர் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள் எதை வாங்கி சாப்பிட்டாலும், சாக்லெட் ப்ளேவரையே தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். அப்படி இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் கேக் செய்வதாக இருந்தால், சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் செய்யுங்கள்.

இது மிகவும் சுவையான கேக் மட்டுமின்றி, எளிமையான செய்முறையையும் கொண்டது. சரி, இப்போது அந்த சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Chocolate Raspberry Cake

தேவையான பொருட்கள்:

டார்க் சாக்லெட் - 2 கப்
கொக்கோ பவுடர் - 1/2 கப்
மைதா - 1 1/2 கப்
ராஸ்பெர்ரி - 2 கப்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
பொடி செய்த சர்க்கரை - 1 கப்
வெண்ணெய் - 250 கிராம்
தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை:

முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்ற வேண்டும்.

பின் ஒரு பேனில் வெண்ணெய், தண்ணீர், சர்க்கரை, கொக்கோ பவுடர் மற்றும் டார்க் சாக்லெட் சேர்த்து, அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

கலவையானது கொதிக்கும் போது, கட்டி சேராத வண்ணம் கிளறி விட்டு, பின் அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும். மிகவும் அவசரமாக கேக் செய்ய வேண்டுமானால், இறக்கி வைத்துள்ள பேனை குளிர்ச்சியான நீரில் வைத்து குளிர வைக்கலாம்.

கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதில் பேக்கிங் சோடா, மைதா சேர்த்து நன்கு கிளறி, பின் சிறிது ராஸ்பெர்ரி சேர்த்து பிரட்ட வேண்டும்.

அடுத்து வெண்ணெய் தடவி வைத்துள்ள பேக்கிங் பேனில், மைதா கலவையை ஊற்றி, அதன் மேல் சிறிது ராஸ்பெர்ரியை தூவி, ஓவனில் வைத்து 80-90 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.

பின் அதனை இறக்கி குளிர வைத்து, ஒரு தட்டில் மாற்றிக் கொண்டால், சுவையான சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் ரெடி!!!

English summary

Chocolate Raspberry Cake

Chocolates and raspberry is one of the best combinations for a delicious dessert. Combine these delicacies and make this awesome chocolate raspberry cake on this Christmas.
Story first published: Wednesday, December 18, 2013, 18:50 [IST]
Desktop Bottom Promotion