For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி ஸ்பெஷல்: சாக்லேட் சிப்ஸ் கேக்!

தீபாவளிக்கான சாக்லேட் சிப்ஸ் கேக் செய்முறை!

By Staff
|

ஏன் நீங்கள் இந்த தீபாவளிக்கு சாக்லேட் சிப்ஸ் கேக் செய்து எல்லோருரையும் முழுமையான ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சியில் தள்ளக் கூடாது?

நீங்கள் இதைச் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும் என நினைக்கலாம். மேழும் இதற்கு பல்வேறு பொருட்கள் தேவைப்படும் என்றும் நினைக்கலாம். ஆனால் இது மிகவும் எளிதானது.

ஒரு சிலர் கேக்குகளை கிருஸ்துமஸ் அன்றுதான் செய்ய வேண்டும் என்றும் நினைக்கலாம். ஆனால் இந்த சாக்லேட் சிப்ஸ் கேக்கைப் பொருத்தவரை இதற்கு நேரம் காலம் தேவையில்லை. ஏனெனில் இது எந்த ஒரு பண்டிகையும் மகிழ்ச்சிகரமாக மாற்றி விடும்.

அதுவும் தீபாவளி என்று வரும் போது, நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் சிறந்த மற்றும் சுவையான ஒன்றை தயாரித்து தர வேண்டும் என்று நினைப்பீர்கள்தானே? எனவே, ஏன் நீங்கள் இந்த சாக்லேட் சிப்ஸ் கேக்கை தயாரித்து இந்த தீபாவளியை மேலும் கோலாகலமாகவும் பிரகாசமாகமாகவும் மாற்றக் கூடாது?

நாங்கள் இந்த கேக் தயாரிக்கத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை குறிப்புகளை கீழே கொடுத்துள்ளோம். அதை படித்துப் பாருங்கள். இந்த தீபாவளியை மறக்க இயலாத தீபாவளியாக மாற்றுங்கள்.


பறிமாறும் அளவு - 4 கேக்

தயாரிப்பு நேரம் - 20 நிமிடங்கள்

சமையல் நேரம் - 50 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

1. வெள்ளை சாக்லேட் - 170 கிராம் (தோராயமாக வெட்டப்பட்டது)

2. டார்க் சாக்லேட் சிப்ஸ் - 50 கிராம்

3. வெண்ணெய் - 25 கிராம்

4. ஆமணக்கு சர்க்கரை - 70 கிராம்

5. முட்டை - 2

6. வெண்ணிலா - 1 தேக்கரண்டி

7. சுத்திகரிக்கப்பட்ட மாவு - 40 கிராம்

8. உப்பு - ஒரு சிட்டிகை

9. கோக்கோ பவுடர் - தூவுவதற்காக

செயல்முறை:

1. ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் வெண்ணெய் மற்றும் ஆமணக்கு சர்க்கரை சேர்க்க வேண்டும். அதன் பிறகு ஒரு கை கலப்பான் கொண்டு, நீங்கள் நன்றாக இந்த இரண்டு பொருட்களையும் கலக்க வேண்டும்.

2. இந்த செய்முறைக்கு உருகிய வெள்ளை சாக்லேட் தேவைப்படும். எனவே, ஒரு மைக்ரோவேவ் ஓவனில் பொடித்த வெள்ளை சாக்லேட்டை வைத்து உருக்க வேண்டும்.

3. இதற்கு இடையில், வெண்ணெய் மற்றும் சர்க்கரை கலவையில் ஒரு முட்டை சேர்க்க வேண்டும். மீண்டும் அந்தக் கலவையை நன்கு கலக்கி அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

4. இப்போது, மைக்ரோவேவ் ஒவனில் இருந்து உருகிய வெள்ளை சாக்லேட்டை எடுத்து அதை லேசாச அசைத்து கலக்க வேண்டும். பிறகு அதை தனியே வைத்து விடுங்கள்.

5. மீண்டும் நீங்கள் தயாரித்த முட்டை கலவையை எடுத்து அதை மீண்டும் கை கலப்பான் பயன்படுத்தி நன்கு கலக்க வேண்டும்.

6. இப்போது, இந்தக் கலவையில் இரண்டாவது முட்டையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலந்த பின் அந்தக் கலவையில் உருகிய சாக்லேட்டை ஊற்றவும்.

7.மறுபடியும் அந்தக் கலவையை நன்கு கலக்கி சிறிது வெண்ணிலா சேர்க்கவும்.

8. ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் டார்க் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து அதனுடன் சுத்திகரிக்கப்பட்ட மாவு சேர்க்க வேண்டும். தற்பொழுது இதை நாம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளை கலவையுடன் இதை கலக்க வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க மறக்க வேண்டாம்.

9. இப்போது, அது கட் மற்றும் போல்ட் முறை பயன்படுத்தி கலவையை நன்கு கலக்கவும்.

10. உங்களுடைய கலவை இப்போது தயாராக உள்ளது. ஒரு தட்டை எடுத்து அதில் பேக்கிங் கப்பை வைக்கவும்.

11. ஒவ்வொரு கப்பிழும் வழுவழுப்பிற்காக வெண்ணெய் தடவவும்.

12. தற்பொழுது கொக்கோ தூள் எடுத்து அதை அச்சு முழுவதும் பரவும் படி தூவவும். மீதி உள்ள கோக்கோ தூளை மீண்டும் கிண்ணத்தில் வைத்து விடவும். இப்பொழுது உங்களுடைய அச்சு தயார்.

13. இப்போது, கலவையை ஒவ்வொரு அச்சிலும் முக்கால் பாகம் இருக்குமாறு நிரப்பவும்.

14. நீங்கள் சுமார் 200 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உங்கள் மைக்ரோவேவ் ஓவனை முன் வெப்பப்படுத்தவும். அதன் பின்னர் சரியாக 14 நிமிடங்களுக்கு உங்களின் கேக்கை பேக் செய்யவும்.

15. தற்பொழுது உங்களுடைய கேக் தயாராக இருக்கும். அதை அடுப்பில் இருந்து வெளியே எடுத்து, அதை சுமார் 2-3 நிமிடங்கள் குளிர விடவும்.

16. இப்போது, மெதுவாக உங்கள் கேக்கை அச்சிலிருந்து பிரித்து எடுக்கவும். தற்பொழுது உங்களுடைய கேக் தயார். அதை தட்டில் வைத்து உங்களின் அன்புக்குரியவர்களுக்கு பரிமாறவும்.


நீங்கள் இந்தக் கேக்கை சூடாக விருந்தினர்களுக்கு பரிமாறும் போது, அவர்கள் அதை முதலில் ஒரு சாதாரண கப்கேக் என நினைக்கலாம். அவர்கள் அதை வெட்டி எடுக்கும் போது, உருகிய சாக்லேட் அவர்களை வசியம் செய்து விடும். என்ன ஒரு பரவச அனுபவம்!

English summary

Chocolate Chips Cake For Diwali

Chocolate Chips Cake For Diwali
Desktop Bottom Promotion