For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாக்லெட் வாழைப்பழ மில்க் ஷேக்

By Maha
|

சாக்லேட் மற்றும் வாழைப்பழம் இரண்டும் சேர்ந்தால் ஒரு ருசிகரமான சுவை கிடைக்கும். இவை இரண்டின் சேர்க்கையோடு, சாக்லெட்டை சேர்த்து, ஒரு மில்க் ஷேக் செய்தால், ஒரு வித்தியாசமான சுவையில் ஒரு அருமையான பழரசம் கிடைக்கும்.

பெரும்பாலானோர், உணவுக்கு அடுத்து ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வது, இதனை தான். அதிலும் இது சாக்லேட் மிக்ஸ் என்பதால் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு சுவையான மில்க் ஷேக்காக இருக்கும்.

Chocolate Banana Milkshake

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 1
சாக்லேட் - 1 சராசரி அளவு பட்டை ( கூடுதல் சுவை இல்லாமல்)
பால் - 1 கப்
சர்க்கரை - சிறிதளவு

செய்முறை:

1. மில்க் ஷேக்கை கலப்பான் அல்லது கைமுறையாகவும் செய்யலாம். எந்த முறையில் செய்தாலும், நன்றாகவே இருக்கும்.

2. கைகளில் செய்வதாக இருந்தால், கைகளை சுத்தமாக கழுவி, பின் வாழைப்பழத்தை பிசைந்தோ அல்லது பிலெண்டர் கொண்டு கட்டிகள் இல்லாதவாறு அரைத்தோ, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

3. பின்னர் சாக்லெட்டை தீயில் காட்டி உருக்கிக் கொண்டு, பின் வாழைப்பழக் கலவையுடன் கலக்கவும்.

4. பின்பு தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

5. பிறகு பாலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

6. ஒரு டம்ளரில் ஊற்றி, அதன் மேல் ஐஸ் அல்லது க்ரீம் வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.

இது மிகவும் எளிதில் செய்யகூடிய சுலபமான வாழைப்பழ சாக்லேட் மில்க் ஷேக் என்பதால், குழந்தைகளும் அவர்களே செய்து குடிக்க ஏதுவாயிருக்கும்.

English summary

Chocolate Banana Milkshake | சாக்லெட் வாழைப்பழ மில்க் ஷேக்

Chocolate and banana share a great affinity, the two flavors blending together perfectly to create a rich and satisfying taste. When a banana is added to a chocolate milkshake, the drink suddenly takes on a richer, creamier and fruitier flavor than the usual chocolate milkshake. For many people, it's all that's needed for a healthy, hearty snack to get them through to the next meal. Here's how to whip up a chocolate banana milkshake using real chocolate.
Desktop Bottom Promotion