For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சப்போட்டா மில்க் ஷேக்

By Maha
|

சப்போட்டாவில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. இதனை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள், சப்போட்டாவை மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம். இது கோடை காலத்தில் குடிக்கும் ஆரோக்கிய பானங்களுள் சிறந்தது.

இந்த சப்போட்டா மில்க் ஷேக் செய்வது மிகவும் எளிமையானது. இப்போது அந்த சப்போட்டா மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Chikku Milkshake

தேவையான பொருட்கள்:

சப்போட்டா - 1 கப் (தோலுரித்தது)
குளிர்ந்த பால் - 1/2 லிட்டர்
தேன் - தேவையான அளவு
ஐஸ் கட்டி - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸி/பிளெண்டரில் சப்போட்டாவைப் போட்டு, 1 கப் பாலை ஊற்றி நன்கு 20-30 நொடிகள் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மீதமுள்ள பால் மற்றும் தேன் சேர்த்து, சில நிமிடங்கள் அடித்துக் கொண்டு, அதனை டம்ளரில் ஊற்றி, சிறிது ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சுவையான சப்போட்டா மில்க் ஷேக் ரெடி!!!

English summary

Chikku Milkshake

Sapota, a popular tropical fruit is rich in nutrients and fibre. Chikku milkshake is an apt cold drink to counter the blistering summer heat, a healthy alternate to store bought artificial drinks.
Story first published: Friday, May 31, 2013, 17:59 [IST]
Desktop Bottom Promotion