For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலட்சுமி ஸ்பெஷல் ரெசிபி: கேரட் பாயாசம்

By Maha
|

வரலட்சுமி பூஜைக்கு நிறைய பலகாரங்கள் செய்து வைத்திருப்போம். அதிலும் விஷேசம் என்றால், அனைவரது வீட்டில் நிச்சயம் பாயாசம் செய்வோம். அந்த பாயாசத்தில் நிறைய வகைகள் உள்ளன. அதில் இப்போது சற்று வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ஒரு பாயாசத்தைப் பார்க்கப் போகிறோம்.

அது என்னவென்றால், கேரட் கொண்டு செய்யப்படும் பாயாசம். இந்த பாயாசத்தின் சுவை வித்தியாசமானதாகவும், அதே சமயம் மிகுந்த சுவையுடனும் இருக்கும். இப்போது அந்த கேரட் பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Carrot Payasam Recipe

தேவையான பொருட்கள்:

கேரட் - 2 (பெரியது)
சேமியா - 2-3 டேபிள் ஸ்பூன்
பால் - 3 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/4 கப்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
பிஸ்தா/முந்திரி - 3-4 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

முதலில் கேரட்டின் தோலை சீவி விட்டு, நறுக்கி நீரில் போட்டு நன்கு மென்மையாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, வேக வைத்த தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியா போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, பாலானது கொதிக்கும் போது, அதில் சேமியாவைப் போட்டு, 3 நிமிடம் வேக வைத்து, பிறகு அரைத்து வைத்திருக்கும் கேரட்டை போட்டு கிளறி விட வேண்டும்.

அடுத்து கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதன் மேல் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பிஸ்தா/முந்திரி சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கினால், சுவையான கேரட் பாயாசம் ரெடி!!! விருப்பப்பட்டால் இதன்மேல் சிறிது உலர் திராட்சையை தூவி அலங்கரித்தும் பரிமாறலாம்.

English summary

Carrot Payasam Recipe

For this Varamahalakshmi festival you might have already decided to prepare few recipes. Here we have given one of the easiest sweet recipe, you can add this recipe in your festival recipes list.
Story first published: Friday, August 16, 2013, 14:30 [IST]
Desktop Bottom Promotion