For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈஸியான... கோதுமை ரவை பாயாசம்

By Maha
|

விநாயகர் சதுர்த்திக்கு நிறைய இனிப்புக்களை தயார் செய்து கொண்டிருப்போம். ஏனெனில் விநாயகருக்கு இனிப்புக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே பல்வேறு வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிக்க பலர் தேடிக் கொண்டிருப்பார்கள். முக்கியமாக பண்டிகை என்று வந்தால், வீட்டில் பாயாசம் இல்லாமல் இருக்காது. பொதுவாக பாயாசம் என்றால், பாசிப்பருப்பு பாயாசம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக கோதுமை ரவையைக் கொண்டு எப்படி பாயாசம் செய்வது என்று பார்க்கப் போகிறோம். இந்த பாயாசம் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது மட்டுமின்றி, அதிக சுவையையும் கொண்டது. சரி, இப்போது அந்த கோதுமை ரவை பாயாசத்தின் செய்முறையைப் பார்ப்போம்.

Broken Wheat Payasam

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப் (தட்டியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
பாதாம் - 10
தண்ணீர் - 3 கப்
முந்திரி - 2-3 (நெய்யில் வறுத்தது)

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவையை போட்டு லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து வைத்துள்ள கோதுமை ரவையைப் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயம், தேங்காய் மற்றும் பாதாமை மிக்ஸியில் போட்டு, ஓரளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து வேக வைத்த கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்ததும், அதில் வெல்லத்தைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

வெல்லமானது கரைந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் பாதாமை போட்டு கிளறி, ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் முந்திரியை தூவினால், சூப்பரான கோதுமை ரவை பாயாசம் ரெடி!!!

English summary

Broken Wheat Payasam

Do you listed recipes for Ganesh festival? If not do it today only, that will reduce your burden on festival day. Here we given the broken wheat payasa recipe. This is very easy to prepare. So you can add in your festival list.
Story first published: Wednesday, September 4, 2013, 17:28 [IST]
Desktop Bottom Promotion