For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழ ஸ்மூத்தி

By Maha
|

அனைவருக்குமே வாழைப்பழம் மிகவும் பிடிக்கும். இத்தகைய வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய பழங்களுள் ஒன்று. இத்தகைய வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை சற்று வித்தியாசமாக ஸ்மூத்தி போன்று செய்து குடித்தால், நன்றாக இருக்கும்.

அந்த வாழைப்பழ ஸ்மூத்தியின் எளிய செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, செய்து குடித்து மகிழுங்கள்.

Banana Smoothie Recipe – Tasty Summer Smoothie

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 1 கப் (நறுக்கியது)
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
வென்னிலா தயிர் - 2 கப்
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
முந்திரி - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிளெண்டரில்/மிக்ஸியில் தேன், வாழைப்பழம், முந்திரி, தயிர், ஐஸ் கட்டிகள் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!!!

English summary

Banana Smoothie Recipe – Tasty Summer Smoothie | வாழைப்பழ ஸ்மூத்தி

We would like to share a tasty Banana recipe, “Banana Smoothies". The chilled fruit recipe is rich and can be best replacement for breakfast recipes. Take a look at how to go about with the mouth watering banana smoothie recipe.
Story first published: Saturday, May 4, 2013, 16:01 [IST]
Desktop Bottom Promotion