For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதாம் அல்வா: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

By Maha
|

கிருஷ்ண ஜெயந்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தியின் போது கிருஷ்ணனுக்கு பிடித்தவாறு பல்வேறு சுவையான ரெசிபிக்களை செய்து படைப்பார்கள். அதில் குறிப்பாக பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்து படைப்பார்கள்.

அப்படி பால், நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு அருமையான ரெசிபி தான் பாதாம் அல்வா. இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. இப்போது அந்த பாதாம் அல்வா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Badam Halwa: Krishna Jayanthi Spl Recipe

தேவையான பொருட்கள்:

பாதாம் - 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்தது)
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1 கப்
நெய் - 1/2 கப்
குங்குமப்பூ - சிறிது (பாலில் ஊற வைத்தது)

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி வாணலியில் பரப்பிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விட வேண்டும்.

பிறகு அதில் பாதாம் பேஸ்ட் சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

அப்படி கிளறி விடும் போது, கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விடும் போது, நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சிவிடும்.

அப்படி நெய்யானது முற்றிலும் வற்றியதும், வாணலியை இறக்கி, மீதமுள்ள நெய் சேர்த்து ஒருமுறை கிளறி குளிர வைத்தால், பாதாம் அல்வா ரெடி!!!

English summary

Badam Halwa: Krishna Jayanthi Spl Recipe

This Krishna Jayanthi recipe is a rich and flavourful one. Badam halwa is recipe that is nutritious and delicious as well. To know more..
Story first published: Wednesday, August 13, 2014, 15:10 [IST]
Desktop Bottom Promotion