For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்ஷய திருதியை ஸ்பெஷல் அவல் பாயசம்!

செல்வம் பொங்க பயன்தரும் அக்ஷய திருதியை நாளை இனிப்புடன் துவங்க ஸ்பெஷல் அவல் பாயசம் ரெசிபி.

By Staff
|

பண்டிகை காலங்களில் பாயசம் இல்லாமல் சமையல் கிடையாது. அட்சய திரிதியை போன்ற விசேச நாட்களில் அவல் பாயசம் செய்து குபேரனுக்கும், லட்சுமிக்கும் நைவேத்தியம் செய்வதும். அன்றைய தினம் அன்னதானம் செய்வதும் சிறப்பு என்று கூறப்படுகிறது. எளிமையான இந்த பாயசத்தை செய்து பாருங்களேன்.

தேவையான பொருட்கள்

அவல் - 1 கப்

சர்க்கரை - 1/2 கப்

பால் - 5 கப்

நெய் – 50 கிராம்

முந்திரி திராட்சை : 50 கிராம்

ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 1 கப்

பாயாசம் செய்முறை

வாணலியில் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை போட்டு வறுத்து எடுக்கவும். தேங்காயை வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.அதே போல் அவலை, கல், தூசி நீக்கி நன்றாக சுத்தம் செய்து வாணலியில் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும்.

அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். பால் கொதித்து வரும் பொழுது அதில் அவலைப் போட்டு வேக விடவும். அடி பிடிக்காமல் அடிக்கடிக் கிளறி விடவும்.

அவல் நன்றாக வெந்ததும், சர்க்கரையைப் போட்டுக் கிளறி விடவும். மிதமான தீயில் வைத்து பாயசம் சற்று கெட்டியாகும் வரை வேக விடவும். இத்துடன் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். சுவையான அவல் பாயசம் ரெடி. குழந்தைகள், பெரியர்களுக்கு ஏற்ற சத்தான இனிப்பு இது.

English summary

Aval payasam recipe for Akshya Tritiya

Payasam is one of the most preferred desserts to celebrate this important day. You can make payasam with rice, sevai or aval.
Desktop Bottom Promotion