For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உகாதி ஸ்பெஷல்: அதிரசம்

By Maha
|

உகாதி பண்டிகையானது நெருங்கிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு புத்தாண்டு என்பதால், பலர் புத்தாண்டை வரவேற்பதற்கு இனிப்புக்களை செய்வார்கள். பெரும்பாலும் உகாதி பண்டிகையன்று அதிரசம் தான் செய்வார்கள். அத்தகைய அதிரசத்தை எப்படி செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.

அதனைப் படித்து பார்த்து, வீட்டில் செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள். குறிப்பாக இதனை செய்வது மிகவும் ஈஸி. சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Athirasam Recipe For Ugadi

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கிலோ
எள் - 1/4 கப்
வெல்லம் - 3/4 கிலோ (தட்டியது)
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை நீரில் 5-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனை நன்கு கழுவி, அதனை ஒரு துணியில் போட்டு நன்கு பரப்பி உலர வைக்க வேண்டும்.

அரிசியானது நன்கு உலர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் பொடி மற்றும் வெல்லத்தைப் போட்டு உருக வைத்து, சிரப்பானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் பொடித்த அரிசியை கெட்டி சேராதவாறு மெதுவாக சேர்த்து நன்கு கிளறி, இறக்கி விட வேண்டும்.

பின் கையில் ஒரு பிளாஸ்டிக் க்ளவுஸ் போட்டு, இறக்கி வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து பின் அதனை தட்டையாக தட்டி, எள்ளில் போட்டு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ளதை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான அதிரசம் ரெடி!!!

English summary

Athirasam Recipe For Ugadi

Athirasam is a popular sweet recipe which is prepared on Ugadi in different parts of South India.
Desktop Bottom Promotion