For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நா ஊறும் அக்கார அடிசல்

By Mayura Akilan
|

Akkara Adisal
பண்டிகை, திருவிழா என்றாலே இனிப்பு இல்லாமல் இருக்காது. நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம். நெய் சொட்டச் சொட்ட செய்யப்படும் இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை ஆடிப் பெருக்கு நாளன்று வீட்டில் செய்து பாருங்களேன்.

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - ½ கப்
பால் - 750 மிலி
வெல்லம் - 2 கப்
முந்திரி, திராட்சை - கால் கப்
ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 50 கிராம்
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

செய்முறை: வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டவும். பின்னர் சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.

அரிசி, பருப்பை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியையும், பருப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய்யை விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். லேசாக கெட்டியான பின் அதில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும். கடைசியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும். அக்கார அடிசல் சுவையும், வாசனையும் சூப்பராக இருக்கும். சூடாக சாப்பிடலாம்.

English summary

Akkara adisal Recipe | நா ஊறும் அக்கார அடிசல்

Akkara Adisal is the quintessentially Iyengar dish that has an unsurpassable taste. Be it any festival or a birthday in the family, finishing a sumptuous meal with this for dessert will be the perfect high note.
Story first published: Wednesday, August 1, 2012, 16:47 [IST]
Desktop Bottom Promotion