For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ருசியான பன்னீர் கட்லெட்: வீடியோ

சில ருசி மிகுந்த பதார்த்தங்களை அதிக முயற்சி இல்லாமல் மிகவும் எளிதாக தயாரித்து விடலாம். திடீர் விருந்தினர்கள் வரும் போது, எளிதான சில சமையல் குறிப்புகள் உங்களுக்கு பெரிதும் கை கொடுக்கும்.

By Batri Krishnan
|

உங்களின் குளிர்சாதன பெட்டியின் உள்ளே பாலாடைக்கட்டி அல்லது பன்னீர் இருந்தால், உங்களின் பிரச்சனை பாதி தீர்ந்தது.

நீங்கள் பன்னீரைப் பயன்படுத்தி மிக எளிதாக கட்லட் தயார் செய்ய முடியும். நீங்கள் மிகவும் ருசி மிகுந்த இந்த செய்முறையை வெகு சில பொருட்களைப் பயன்படுத்தி மிகவும் வேகமாக செய்ய முடியும்.

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை குறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


பறிமாறும் அளவு - 8 பேர்

தயாரிப்பு நேரம் - 10 நிமிடங்கள்

சமையல் நேரம் - 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

1. பாலாடைக்கட்டி (பன்னீர்) - 2 கப் (துறுவியது)

2. சமைத்த அரிசி - ½ கப் (குளிர்ந்தது)

3. உப்பு - தேவையான அளவு

4. பச்சை மிளகாய் - 1½ தேக்கரண்டி (நறுக்கியது)

5. சுத்திகரிக்கப்பட்ட மாவு - ¼ கப்

6. கொத்தமல்லி - ¼ தேக்கரண்டி (நறுக்கியது)

7. குடமிளகாய் - பல்வேறு நிறங்களில் அரை கப் (நறுக்கியது)

8. ரொட்டி துணுக்குகள் - மேல் பூச்சிற்காக

9. எண்ணெய் - 2 தேக்கரண்டி

செயல்முறை:

1. துருவிய பாலாடைக்கட்டியை எடுத்து அதனுடன் சமைத்த அரிசியை சேர்க்க வேண்டும்.

2. இப்போது, அதனுடன் சுத்திகரிக்கப்பட்ட மாவு, உப்பு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

3. இப்போது, கொத்தமல்லி மற்றும் நறுக்கப்பட்ட குடமிளகாயை சேர்க்க வேண்டும். நீங்கள் பல்வேறு வகையான மணி மிளகுத்தூளை பயன்படுத்தினால் உங்கள் கட்லட் உண்மையில் வண்ணமயமாக இருக்கும்.

4. அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து உங்கள் கையால் சிறிய கட்லட் செய்ய வேண்டும்.

5. இப்போது, ஒரு டவாவை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்ர்து சூடாக்க வேண்டும்.

6. இப்பொழுது கட்லெட்டை டவாவில் வைத்து அவை பொன்னிறமாக வரும் வரை வேக விடவேண்டும்.

7. கட்லெட் அனைத்து பக்கங்களிலும் வெந்த பின்னர் அவைகளை சூடாக தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி உடன் பரிமாறவும்.

English summary

delicious paneer cutlet video

Do you want to cook delicious paneer cutlet. watch this video.
Desktop Bottom Promotion