For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்ல விசேஷமா? இந்த பிஸ்கட் லட்டு செஞ்சு பாருங்க!! ஈஸி ரெசிபி

நீங்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் பிற மற்ற குடும்பத்தினரின் மனம் கவர ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்யத் தயார் எனில்,இந்த பிஸ்கட் லட்டு செய்முறை குறிப்புகளைத் செய்து பாருங்கள்

By Lekhaka
|

ஏதாவது வீட்டில் விசேஷம் என்றால் நாம் அனைவருக்கும் அற்புதமான உணவுகள் மட்டுமே நினைவுக்கு வரும். அந்த உணவுகளுக்கு மத்தியில் இனிப்புகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. மேலும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பொரித்த உணவுகள் மிகவும் பிடிக்கும்.

எங்களை நம்புங்கள். இதன் செய்முறை மிகவும் எளிது மற்றும் உங்களுடைய உறவினர்கள் இதற்கு முன்னர் இதைப் போன்ற இனிப்புகளை கண்டிப்பாக ருசி பார்த்திருக்க மாட்டார்கள். எனவே, ஏன் நீங்கள் அவர்களை ஆச்சர்யப்படுத்தக் கூடாது? கீழே கொடுத்துள்ள செய்முறைக் குறிப்புகளை முழுதாகப் படித்துப் பாருங்கள்.

பறிமாறும் அளவு - 4

தயாரிப்பு நேரம் - 10 நிமிடங்கள்
சமையல் நேரம் - 25 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

1. மேரி பிஸ்கட் - 1 பாக்கெட்
2. கன்டென்ஸ்ட் மில்க் - அரைக் கப்
3. கோக்கோ பவுடர் - 4 தேக்கரண்டி
4. பால் - 2 தேக்கரண்டி
5. உலர் பழங்கள் - 2 டீஸ்பூன் (நறுக்கியது)

அழகுப்படுத்துவதற்காக :

6. ரெயின்போ தெளிப்பு - 1 தேக்கரண்டி
7. சாக்லேட் - அரை கிண்ணம் (துறுவியது)
8. தேங்காய் பவுடர் - 4 தேக்கரண்டி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல்முறை:

செயல்முறை:

1. ஒரு மிக்ஸியை எடுத்து அதில் பிஸ்கட்டை போட்டு நன்றாக தூளாக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 2 முதல் 3 கரண்டி கன்டெஸ்ட் பாலை சேர்க்கவும். அதனுடன் கொக்கோ தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

செயல்முறை:

செயல்முறை:

2 இப்பொழுது கலவையானது ஒரு தடித்த நிலைத்தன்மையுடன் கிடைக்கும். இப்போது கலவையுடன் பிஸ்கட் தூளைச் சேர்க்கவும்.

கலவையுடன் நீங்கள் தனியே எடுத்து வைத்துள்ள் உலர் பழங்களைச் சேர்க்கவும்.

செயல்முறை:

செயல்முறை:

3. நீங்கள் விரும்பினால் கலவையுடன் மேலும் அதிகமான கன்டென்ஸ்ட் பால், மற்றும் கோகோ பவுடரைச் சேர்க்கலாம்.

அவை லட்டுவிற்கு மேழும் அதிகமான வழவழப்பைத் தரும்.

மீண்டும், நீங்கள் கலவையை நன்கு கலக்க வேண்டும். கலவையானது ஒரு அடர்ந்த அரை உலர் நிலைக்கு வர வேண்டும்.

அப்பொழுதுதான நீங்கள் லட்டுவை குறிப்பிட்ட வடிவில் பிடிக்க முடியும்.

செயல்முறை:

செயல்முறை:

4. இப்போது, சிறிதளவு நெய் எடுத்து உங்களின் உள்ளங்கைகளில் தடவிக் கொண்டு கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவும்.

பிடித்த லட்டுவை ஒரு தட்டில் தனியே வைக்கவும்.

லட்டுவை, துறுவிய சாக்லேட், தேங்காய் பவுடர் மற்றும் வானவில் தெளிப்பு கொண்டு அலங்கரிக்கவும்.

லட்டுவை பிரிட்ஜில் சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் வைத்து குளிர விடவும். தற்பொழுது சுவையான பிஸ்கட் லட்டு தயார். அதை உங்களின் அன்புக்குரியவர்களுக்கு பரிமாறவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

biscuit ladoo recipe for diwali

Bicuit laddu recipe for any kind of function.less making time. and healthy too. just try it
Desktop Bottom Promotion