For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலிஃப்ளவர் 65

By Maha
|

மாலை வேளையில் பசிக்கும் போது பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு சிக்கன் 65 போன்று, காலிஃப்ளவர் 65 செய்து சாப்பிடுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி.

இங்கு காலிஃப்ளவர் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Yummy Tummy: Gobi 65 Dry Recipe!

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1 சிறியது (நறுக்கியது)
தயிர் - 100 மி.லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொதிக்கும் நீரில் காலிஃப்ளவரை நீரில் போட்டு, சிறிது நேரம் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், மிளகுத் தூள், கேசரி பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த கலவை அதிக நீராகவோ, கெட்டியாகவோ இருக்கக்கூடாது.

பின் அதில் காலிஃப்ளவரை போட்டு நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், காலிஃப்ளவர் 65 ரெடி!!!

English summary

Yummy Tummy: Gobi 65 Dry Recipe!

Here is how you prepare gobi 65 dry. Take a look at this easy and yummy recipe and do let us know how your dish came out!
Story first published: Monday, April 6, 2015, 17:14 [IST]
Desktop Bottom Promotion