For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால சாலட் ரெசிபி

By Maha
|

தற்போது நீரிழிவு நோய் பலருக்கும் இருப்பதால், எதையும் நிம்மதியாக சாப்பிட முடியாத நிலையில் உள்ளோம். ஏனெனில் டிசல உணவுப் பொருட்களை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் எதையும் செய்து சாப்பிட முடியாமல் பலரும் தவிக்கின்றனர்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால சாலட் ரெசிபியைக் கொடுத்துள்ளது. இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் எந்நேரத்திலும் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். சரி, இப்போது அந்த கோடைக்கால வெள்ளரிக்காய் சாலட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Diabetic-Friendly Summer Salad Recipe

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 50 கிராம் (நறுக்கியது)
முளைக்கட்டிய பச்சை பயறு - 50 கிராம்
குறைந்த கொழுப்புள்ள தயிர் - 50 கிராம்
நறுக்கிய பச்சை மிளகாய் - 5 கிராம்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு பெரிய பௌலில் நறுக்கிய வெள்ளரிக்காய், முளைக்கட்டிய பச்சை பயறு, பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் காய்கறிகள் தயிருடன் ஒன்று சேரும் வகையில் நன்கு பிரட்டி விட வேண்டும்.

பிறகு அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைத்து, பின் கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால சாலட் ரெடி!!!

English summary

Diabetic-Friendly Summer Salad Recipe

An exclusive recipe for Diabetic people is here. This fresh and nutritious salad with cucumber and bean sprouts is a great way to refresh yourself on a hot summer day.
Story first published: Monday, April 20, 2015, 17:11 [IST]
Desktop Bottom Promotion